திருகோணமலை- கொழும்பு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
திருகோணமலை- கொழும்பு வரையான தொடருந்து சேவை மிக நீண்ட நாட்களின் பின் இன்று (20.12.2025) காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்ககப்பட்டுள்ளது.
அத்தோடு, குறித்த தொடருந்தானது கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி காலை 06.00 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொடருந்து சேவையானது கடந்த மாதம் 27ஆம் திகதியில் இருந்து சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டது.
இரவு நேர சேவை
இருந்த போதிலும் திருகோணமலை- கொழும்புக்கான இரவு நேர சேவை இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையும் காணப்படுகிறது.

திருகோணமலை- கொழும்பு வரையான சேவையில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.
முதலாம் தர குளிரூட்டப்பட்ட சேவையின் ஊடாக வெளிநாட்டவர்களின் பயணங்கள் அதிகமாக இருந்தது. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் மிக விரைவில் இரவு நேர சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


