திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் விபத்து
திருகோணமலை - ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில், யான் ஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறிய ரக வாகனமொன்று பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று(07.06.2026) காலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
விபத்தின்போது வாகனத்தின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் கடுமையாகச் சிதைவடைந்துள்ளன.
விபத்து இடம்பெற்றபோது வாகனத்தில் இருந்தவர்கள் காயங்கள் எதுவுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஹொரவ்பொத்தானை பொலிஸார், குறித்த விபத்தானது வாகனத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதா, அல்லது சாரதியின் கவனக்குறைவா, என்பது குறித்து மேலதிக விசாரணைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam