சர்வதேச நீதிப்பொறிமுறையே தேவை: திருகோணமலை வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்க தலைவி
எங்களுக்கு சர்வதேச நீதிப்பொறி முறை ஊடாக தீர்வை தாருங்கள், இந்த PTA, PSTA சட்டம் தேவையில்லை என திருகோணமலை வலிந்து கடத்தப்பட்டு காணாமல் போன உறவுகளின் சங்க தலைவி நாகேந்திரன் ஆசா தெரிவித்துள்ளார்.
புதிய சங்க நிர்வாக தெரிவு நேற்றைய தினம் (15) திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை இல்லை
பதிலடி கற்பனைக்கு எட்டாத கடுமையாக இருக்கும்: ஈரான் அதிரடி எச்சரிக்கை - அண்டை நாட்டு அமெரிக்க தளங்களும் இலக்கு
மேலும் தெரிவிக்கையில், எங்களுக்கு ஆணைக்குழுக்கள் மீது நம்பிக்கை இல்லை. எத்தனை பதிவுகளை பெற்று எங்களை ஏமாற்றியுள்ளனர். மகளிர் தினத்தினை முன்னிட்டு நாங்கள் ஆடி பாடி கொண்டாடவில்லை.
இந்த அரசாங்கம் எங்களை ஏமாற்றியுள்ளது. 2006ம் ஆண்டுக்கு முன்னர் உள்ள யுத்த காலத்தில் இருந்து எங்கள் உறவுகளை இழந்து தவிக்கின்றோம்.
இதனால் பயங்கரவாத சட்டமோ, அதில் இருந்து அரச பாதுகாக்கின்ற எந்தவொரு சட்டமும் தேவையில்லை என்பதை அரசாங்கத்துக்கு இந்த சந்தரப்பத்தில் எடுத்து கூறுகின்றோம். எனவே சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக தீர்வை பெற்றுத் தாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
