அம்பாறையில் முச்சக்கரவண்டி சாரதிகள் போராட்டம்(Photo)
எரிபொருள் உரிய முறையில் கிடைக்க ஆவண செய்யுமாறு கோரி முச்சக்கரவண்டி சாரதிகள் இன்று (7) காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டமானது, அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் ஆரம்பித்து மாநகர பகுதியினுடாக ஊர்வலமாக சென்றுள்ளது.
மனு கையளிப்பு
இதன் பின்னர் கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
இதன்போது “நாங்கள் எரிபொருள் பிரச்சினை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.
அத்தியாவசிய சேவை என சில துறையினருக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது.
கோரிக்கை
எமது சேவையும் அத்தியாவசிய சேவையின் ஒரு பகுதியாக கருதி எமக்கான எரிபொருளையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
