தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதான பணிகள் ஆரம்பம்(Photos)
தமிழர் தாயகப் பகுதிகளில் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க மக்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணி
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தயாராகி வருகின்றன.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் இன்று (11.11.2023) ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம்பெற்றதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாண்டும் கார்த்திகை 27 மாவீரர் நாள் உணர்வு பூர்வமாக இடம்பெறும் எனவும் அனைத்து மாவீரர் பெற்றோர் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் முன்னாயத்த பணிகளிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிங்கள மக்களையும் சிங்கள ஊடகங்களையும் திரும்பி பார்க்கவைத்த றீ(ச்)ஷா: இயக்கச்சியில் வியக்கவைக்கும் முயற்சி (Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam