குடத்தனை வடக்கிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல் நிகழ்வாக பொது ஈகைச்சுடரினை இரண்டு மாவீரர்களின் தாயாரான திருமதி ஏற்றி வைத்தார்.
கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
மலரஞ்சலி
அதனை தொடர்ந்து மாவீரர்களது திருவுருவ படங்களுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டன.

இந்தநிகழ்வில், குடத்தனை வடக்கு, குடத்தனை கிழக்கு, பொற்பதி அம்பன் உட்பட்ட பல்வேறு கிராமங்களிலிருந்தும் வருகைதந்து மக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை தமிழரசு கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் முன்னெடுப்பில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், உள்ளூர் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, நெல்லியடி நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் மையத்தில் மாவீரர்களுக்கான இறுதி நாள் நினைவு தினம் இன்று (கார்த்திகை 27) மாலை 6.05 மணியளவில் மரியாதையுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
AMZOKH
மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம் பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் இன்றைய தினம் பிற்பகல் 6:5 மணியளவில் மணியோசை இசைக்கப்பட்டு பிற்பகல் 6:6ற்கு பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில் #கம்பர்மலை சந்தியில் அமைந்துள்ள முதலாவது மாவீரர் சங்கரின் (சத்தியநாதன் சிலையடி) நினைவிடத்தில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இன்று மாவீரர் தினம் பேரெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.




சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri