மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு சுவிட்சர்லாந்தில் அஞ்சலி
தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான இராஜநாயகம் பாரதிக்கான அஞ்சலி கூட்டம் ஒன்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (30) சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் லுட்சேர்ன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர்
ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி தனது 62 ஆவது யாழ்ப்பாணத்தில் காலமானார்.
மூத்த ஊடகவியலாளரான இவர் சுமார் 40 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடகத்துறை அனுபவத்தை கொண்டவராவார்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி, கொழும்பில் சிங்கள ஊடக அமைப்புகளுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழின் பிரதம ஆசிரியராக ஒரு வருடம் கடமை புரிந்தார்.
35 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பாரதி, தனது சொந்த மண்ணில் மரணிக்கும் வரை வீரகேசரியின் வடபிராந்திய ஆசிரியராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












