வடக்கில் கடற்றொழிலாளர்களுக்காக சேவை ஆற்றியோருக்கு கௌரவிப்பு
வடக்கு மாகாணத்தில் கடற்றொழிலாளர் நலன்களுக்காக நீண்டகாலமாக சேவையாற்றியவர்கள் நேற்றைய தினம் (03) பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினரால் சமாச மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வானது, பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிஸ் குரஸ் யாழப்பாண மாவட்ட இணைப்பாளர் நா.இன்பநாயகம், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆ.சதீஸ் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் சி.பிரதாஸ், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மாவட்ட யாழ்ப்பாணம் மாவட்ட தலைவர் இ.முரளீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தலைவர் திரு.அமலதாஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
கலந்து கொண்டோர்
மேலும், முல்லைத்தீவு மாவட்ட தலைவர் நடனலிங்கம், மன்னார் மாவட்ட தலைவர் டேவிட், கிளிநொச்சி தலைவரும் இணையத்தின் உப தலைவருமான ஜோசப் பிரான்சிஸ், இணையத்தின் முன்னாள் தலைவர் அச்சுதன், நீண்டகால செயற்பாட்டாளர்களான அந்தோணி, கிளிநொச்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் இணைய தலைவர் சந்திர மோலீசன் மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த அமலோத்தபவம் ஆகியோருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முல்லைத்தீவை சேர்ந்த அன்ரணி தற்போதைய வடக்கு மாகாண இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம், செயலாளர் முகமட் ஆலம், பொருளாளர் இர.பிரியா மற்றும் தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேமன் குமார, நீர்கொழும்பு சிறிவிமுத்தி பெண்கள் அமைப்பு தலைவி சுபாஜினி ஆகியோரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர் நிர்வாகிகள் உறுப்பினர்கள், பணியாளர்கள், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்க நிர்வாகிகள் பணியாளர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
