இ.தொ.காவின் 82ஆவது அகவையை முன்னிட்டு தொண்டமானுக்கு அஞ்சலி!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 82ஆவது அகவையை முன்னிட்டு பழைய பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ.தொ.காவின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதன்போது இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன், பிரதமரின் பெருந்தோட்டங்களுகான இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் மலர்மாலை அணிவித்தனர்.
அத்துடன் இ.தொ.காவின் தலைமையகமான சௌமியபவனிலும் அமரர் சௌமிய மூர்த்திதொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செதுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan