மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு மலையகத்தில் அஞ்சலி
மூத்த ஊடகவியலாளர் அமரர் இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினரால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று (15) காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றுள்ளது.
மலரஞ்சலி
இதன்போது, நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் டக்லஸ் நாணயக்கார, செயலாளர் திலங்க காமினி , பொருளாளர் மு.இராமசந்திரன், தேசிய அமைப்பாளர் எஸ்.தியாகு மற்றும் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இணைந்து அன்னாரின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலக்குறைவினால் கடந்த 9 ஆம் திகதி தனது 62 ஆவது வயதில் இவ்வுலகை விட்டு நீங்கியமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri