இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி
மறைந்த, இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன்(R. Sampanthan) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
துயரின் வெளிப்பாடாக அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அஞ்சலி உரைகள்
தொடர்சியாக அன்னாரின் திருவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தபட்டதோடு, தொடர்ந்து அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
இதன்போது நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணி, தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 23 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan
