குகனின் 27ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த முன்னாள் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் இராஜரட்ணம் கிறிஸ்டி குகராஜாவின் 27ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று(15.05.2026) வவுனியா - வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு முன்பாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நினைவு அஞ்சலி
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொண்டு, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகனின் உருவப்படத்திற்கு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதன்போது, மறைந்த குகனின் விடுதலைப் பங்களிப்பு மற்றும் மாவட்ட ரீதியிலான மக்கள் பணிகள் நினைவு கூரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
