ஓய்வுபெற்ற கிளிநொச்சி அதிபருக்கு லண்டனில் மதிப்பளிப்பு
கிளிநொச்சியில் இருந்து இலண்டன் வருகைதந்த ஓய்வுநிலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கத்தை மதிப்பளிக்கும் நிகழ்வு ஒன்று இலண்டனில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (11.05.2024) கிளிநொச்சி மக்கள் அமைப்பினராலும் கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்க பிரித்தானியக் கிளையினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலர் பங்கேற்பு
இவர் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னனி பாடசாலைகளான கிளிநொச்சி மகா வித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கிளிநொச்சிப் பிரதேச உறவுகள் மற்றும் அவரது மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.