தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் நந்திக்கடலில் அஞ்சலி (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றொழிக்கப்பட்ட நந்திக்கடல் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் பொதுச்சுடர் ஏற்றி மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொன்று அழிக்கப்பட்டதன் நினைவாகத் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரம் வருடம் தோறும் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்ற பல்வேறு பகுதிகளிலும் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தில் ஆரம்ப நாள் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று அழிக்கப்பட்ட போது உணவின்றி தவித்த வேளையில் அவர்களுக்கு உயிர்காத்த உணவாகிய கஞ்சி வழங்குகின்ற நிகழ்வுகளும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கு,கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam