கோவிட் தொற்றினால் உயிரிழந்த வைத்தியருக்கு வவுனியாவில் அஞ்சலி
கோவிட் தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாராயணவிற்கு வவுனியாவில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்த வைத்தியரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றுள்ளன.
கோவிட் தொற்றால் பீடிக்கப்பட்ட குறித்த வைத்தியர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே கடந்த வாரம் உயிரிழந்திருந்தார்.
ராகம வைத்தியசாலையில் பணியாற்றி வந்திருந்த இவர் இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த முதலாவது வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சலி நிகழ்வில் அரச அதிபர் சமன் பந்துலசேன, வைத்தியர்களான சுதாகரன், மதுரகன், நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், சிறுவர் நன்னநடத்தை அதிகாரி கெனடி, சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்
காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து