டயானா கமகேக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
போலி ஆவணங்களை தயாரித்து இலங்கையின் கடவுச்சீட்டைப் பெற்றதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி டயானா கமகே குற்றச்சாட்டுகளை மறுத்து தாம் நிரபராதி என்று வாதிட்டார்.
ஆரம்ப ஆட்சேபனைகள்
வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பினார்.
வழக்கின் மைய ஆவணம் 2003இல் தயாரிக்கப்பட்டது என்றும், இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், 2024 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், அத்தகைய காலாவதியான ஆவணத்தின் மீது நடவடிக்கை எடுக்க எந்த சட்ட அடிப்படையும் இல்லை என்றும் அவர் வாதிட்டார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை, எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
