கோட்டாபயவுக்கு எதிரான விசாரணை! அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்
விசாரணைக்கு எடுக்கப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு
நாட்டில் கடந்த 70 வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு இன்றைய தினம் (07.10.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் விசாரணையை முன்னெடுக்க இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மகிந்த, பசில் உள்ளிட்டோருக்கு எதிராகவும் விசாரணைக்கு அனுமதி

இதனை தவிர முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உட்பட்ட தரப்புக்களால் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri