தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி பயணம்: வெளியான அறிவிப்பு

Mannar Matale Central Province
By Kajinthan Aug 02, 2023 10:37 AM GMT
Report

மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில், (03.08.2023) திகதி காலை 9 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து நடை பயணம் ஆரம்பமாகும் என மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு மலையக எழுச்சி பயண வட மாகாண ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

அந்த ஏற்பாட்டுக்குழு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிளிநொச்சி டிப்போ சந்தி முதல் வைரவர் கோவில் வரை நடை பயணம் இடம் பெறும். வைரவர் கோவிலில் இருந்து வாகன பேரணி ஊடாக 55 ஆம் கட்டையை சென்றடைந்து, 55ம் கட்டை முதல் இரணைமடு சந்தி வரை நடை பயணம் இடம்பெறும்.

தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி பயணம்: வெளியான அறிவிப்பு | Trekking To Support Uphill Travel

இதனையடுத்து இரணைமடு சந்தியில் இருந்து வாகனப் பேரணியாக இந்துபுரம் தேவாலயம் சென்று, இந்துப்புரம் தேவாலயம் முதல் பல்கலைக்கழக சந்தி வரை நடை பயணம் இடம்பெறும்.

இதனை அடுத்து பல்கலைக் கழக சந்தியில் இருந்து வாகன பேரணியாக சென்று, திருமுருகண்டி கோயில் பகுதியில் நடை பயணம் இடம்பெறும். இதனை அடுத்து திருமுருகண்டியில் இருந்து வாகன பேரணியாக மாங்குளம் சென்று, மாங்குளம் யுவசக்தி அலுவலகத்தி ற்கு முன்பாக இருந்து மாங்குளம் புனித அக்னேசு தேவாலயம் வரை நடை பயணம் இடம்பெறும்.

இதனையடுத்து மாங்குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக கனகராயன் குளம் சென்று, கனகராயன் குளம் நகரப் பகுதியில் நடை பயணம் இடம்பெறும்.

பின் கனகராயன் குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக புளியங்குளம் சென்று, புளியங்குளம் முத்து மாரியம்மன் கோவிலில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நடை பயண குழுவினருடன் யாழ்ப்பாண மாவட்ட நடை பயண குழுவினரும் இணைந்து, முத்து மாரியம்மன் ஆலயத்தில் வவுனியா மாவட்ட நடை பயண ஏற்பாட்டு குழுவினர் ஏற்பாடு செய்துள்ள வழிபாடுகளில் கலந்து கொண்டு அவர்களுடன் இணைந்து அங்கிருந்து புளியங்குளம் நகரப் பகுதி வரை நடை பயணம் இடம்பெறும்.

தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி பயணம்: வெளியான அறிவிப்பு | Trekking To Support Uphill Travel

இதனை அடுத்து புளியங்குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக ஓமந்தை சென்று, ஓமந்தை நகரப் பகுதியில் நடைப் பயணம் இடம் பெறும். இதனை அடுத்து ஓமந்தையில் இருந்து வாகனப் பேரணி ஊடாக தாண்டிக்குளம் சென்று, தாண்டிக்குளம் நகரப் பகுதியில் நடை பயணம் இடம்பெறும்.

இதனை அடுத்து தாண்டி குளத்தில் இருந்து வாகனப் பேரணி ஊடாக வவுனியா பழைய பேருந்து நிலையம் சென்று, பழைய பேருந்து நிலையம் முன்பாக நடை பயணம் இடம் பெறும் வவுனியா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மண்டபத்தில் மாலை 3 மணிக்கு மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு மலையக எழுச்சி பயணத்தின் வவுனியா ஏற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்துள்ள மலையக எழுச்சி பயணத்தின் நோக்கம் குறித்தும் மலையகம் 200 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கலை கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சிறப்புரைகள் இடம்பெறும்.

பின்னர் அன்று இரவு வவுனியாவில் ஓய்வில் ஈடுபட்டு, மீண்டும் 04/08/2023 காலை 5 மணிக்கு வவுனியா கந்தசாமி கோவிலில் இருந்து மதவாச்சி நோக்கி நடை பயணம் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US