மரம் விழுந்ததில் வீடு சேதம் போக்குவரத்து தடை
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகரூப் நகரில் மரம் முறிந்து விழுந்ததில் வீடொன்று சேதமடைந்துள்ளது.
நேற்று வீசிய கடும் காற்றின் காரணமாக வீட்டுக்கு முன்னால் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளதுடன் சுவரில் வெடிப்பும் ஏற்பட்டுள்ளது.
கோவிட் காலத்தில் வேலையும் இல்லாத நிலையில் இவ்வாறு வீடு சேதமடைந்துள்ளமையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதேவேளை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பிள்ளையார் ஆலயத்திலுள்ள சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் நேற்று இரவு 10 மணியளவில் முறிந்து விழுந்துள்ளது.
இதனால், ஆலங்கேணி, ஈச்சந்தீவுகான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் ஈச்சந்தீவுக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
ஈச்சந்தீவு பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் ஆலமரத்தை அகற்றி போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.