கிளிநொச்சியில் திடீர் சோதனையின் போது பாலை மரக்குற்றிகள் மீட்பு
கிளிநொச்சி - புளியம்பொக்கனை பகுதியிலிருந்து 40 இலட்சம் ரூபா பெறுமதியான பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இந்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மரக்குற்றிகளை புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கனரக வாகனத்தில் எவ்வித அனுமதி பத்திரமும் இன்றி ஏ 35 பிரதான வீதி ஊடாக கொண்டு சென்ற போது இவ்வாறு சிக்கியுள்ளது.

குறித்த சம்பவத்தின் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - தேவாந்தன்
முதலாம் இணைப்பு
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உ்டபட்ட பகுதியில் மரக்குற்றிகளை கடத்த முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (18.03.2026) இடம்பெற்றிருந்தது.
இதன்போது சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சாரதி கைது
மரக்குற்றிகளை பாரஊர்தியொன்றில் கடத்த முயன்றுள்ள நிலையில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பாரஊர்தியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri