திருகோணமலையில் சீரற்ற காலநிலையால் முறிந்து விழுந்த பாரிய மரம்
சீரற்ற காலநிலை காரணமாக இன்று (19.01.2025) திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குற்பட்ட உப்புவெளி பகுதியில் வீதி அருகில் இருந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக அவ்வீதிப் போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்திற்கு தடைப்பட்டிருந்தது.
உரிய நடவடிக்கை
இதனை தொடர்ந்து, திருகோணமலை நகராட்சிமன்ற விசேட பணிக்குழு (Revenu Development and Disaster - Task force) உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் நகராட்சிமன்ற தீயணைப்பு பிரிவினர், நகராட்சிமன்ற ஊழியர்கள், உடனடியாக செயற்பட்டு குறித்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடனும் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |