திருக்கோவில் வில்காமத்தில் புதையல் தோண்டிய 11 பேர் கைது
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வில்காமம் மலை பிரதேசத்தில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட 11 பேரை நேற்று வியாழக்கிழமை (25) இரவு கைது செய்ததுடன் புதையல் தோண்டலுக்கான உபகரணங்களையும் மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள மலையில் கல்லுடைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மலைக்கு அருகில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஒரு குழுவினர் ஈடுபட்டுவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதியை பொலிஸார் முற்றுகையிட்டபோது அங்கு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தம்பிலுவில் மற்றும் திருக்கோவிலைச் சேர்ந்த 11 பேரை கொண்ட குழுவினரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் அலவாங்கு மண்வெட்டி மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
