வட கொரியாவில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி: அமெரிக்காவுக்கு புதிய ராஜதந்திர தலையிடி
கொரிய வளைகுடாவில் பதற்றம் உருவான பின்னரான பல தசாப்தங்களில் முதன்முறையாக எல்லை தாண்டிய அமெரிக்க இராணுவத்தை சேர்ந்த (Travis king) வட கொரியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளமை அமெரிக்காவுக்கு புதிய ராஜதந்திர தலையிடியை உருவாக்கியுள்ளது.
நேற்றையதினம் (19.07.2023) Travis king எல்லைக்கோட்டை தாண்டி வடகொரியாவுக்குள் நுழைந்த போது பிடிக்கப்பட்டார்.
1982 ஆம் ஆண்டுக்கு பின்னர் வட கொரி எல்லைக்குள் நுழைந்த முதலாவது அமெரிக்கப்படை உருப்பினராக இவர் பதிவாகியுள்ளார்.
வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளையும் பிரிக்கும் எல்லைக்குள் Travis king வேண்டுமென்றே அனுமதி இல்லாமல் நுழைந்ததாக அமெரிக்க இராணுவம் கூறுகின்றது.
மேலும் அமெரிக்கா இராணுவத்தின் ஒருங்காற்று விசாரணைகளை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே வட கொரியாவிடம் தஞ்சம் அடைந்ததாக கருதப்படுகின்றது.
இது தொடர்பிலான முழுமையான ஆராய்வுகளுடன் வருகிறது செய்தி வீச்சு,