பயண தடை விதிப்பது குறித்து இராணுவ தளபதி இன்று வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போதுள்ள நிலைமைக்கமைய தொடர்ந்து நாட்டை மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கொவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி தீர்மானித்துள்ளது.
இறுதியாக கூடிய கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக பல்வேறு பயணத்தடை விதித்து நாட்டை முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொவிட் தடுப்பு செயலணி மற்றும் சுகாதார பிரிவு இணைந்து, நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்து வருகிறது. அதில் கிடைக்கும் தரவுகளுக்கமைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காாட்டியுள்ளார்.
அதற்கமைய அவசியம் ஏற்பாட்டால் நாடு முழுவதும் மீண்டும் பயணத்தடை விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சுட்டிக்காட்டியு்ளளார். தற்போதைய நிலைமை அந்த அவசியம் இல்லை. தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் எதிர்வரும் நாட்களில் கொவிட் நிலைமையில் மாற்றமடைய வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri