பிரித்தானியாவின் சிவப்பு பயணப்பட்டியலிலிருந்து நீக்கப்படவுள்ள 45 நாடுகள்?
பிரித்தானியாவில் சிவப்பு பயணப்பட்டியலில் இருந்து குறைந்தது 45 நாடுகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பை இந்த வார இறுதியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் 54 நாடுகள் உள்ளதுடன்,அதில் 9 நாடுகளுக்கு மட்டும் பயணத்தடையை நீடிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஏனைய 45 நாடுகளைச் சேர்ந்த முழு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட பயணிகளுக்கு இனி தனிமைப்படுத்தல் தேவைப்படாதென்றும்,அதில் பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இனி பிரித்தானியாவுக்கு வருகை தரும் போது அரசு நியமிக்கப்பட்ட ஹோட்டல்களில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்றும் கூறப்படுகின்றது.
அதேபோல், சிவப்பு பட்டியலில் இல்லாத நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழுமையாக 2 தடுப்பூசிகள் செலுத்தியிருந்தால், அவர்கள் பிரித்தானியாவுக்கு வருவதற்கு முன்பு கோவிட் -19 சோதனையை மேற்கொள்ள வேண்டிய தேவையில்லையென்றும் கூறப்படுகின்றது.