இலங்கையில் கோவிட் தொற்றாளர்கள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு தீவிரம்
தற்போதுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் முறையாக அமுல்படுத்தப்படாவிட்டால் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் நீடிக்க வேண்டியிருக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இன்று தெரிவித்தார்.
சமூகத்தில் தொடர்ந்தும் பொதுமக்களின் இயக்கத்தை காணமுடிகின்றது. எனவே தற்போதைய கட்டுப்பாடுகள் முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பது குழப்பமாக இருப்பதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
பயண கட்டுப்பாட்டை கடுமையாக்கி, தேவையற்ற இயக்கங்கள் குறைக்கப்படுவதை திறம்பட கண்காணிக்க வேண்டும் என்று அவர் இதன்போது வலியுறுத்தினார்.
நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால், திடீரென்று, COVID-19 தொற்றுகள் அதிக எண்ணிக்கையில் அதிகரிக்கக்கூடும்.
இதற்கிடையில், இலங்கையில் இன்னமும் ஆபத்து தீவிரமாக உள்ளது.
நாளாந்தம் 2000 வரையான தொற்றுகள் பதிவாகும் சூழ்நிலையில், நாடு ஆபத்தில்
இல்லை என்று கூற முடியாது என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
