எந்த நேரத்திலும் மீண்டும் பயண கட்டுப்பாடு விதிக்கப்படலாம் - இராணுவ தளபதி எச்சரிக்கை
நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என பரவும் செய்திகளில் உண்மை இல்லை என இராணுவதளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு மாத காலம் நாடு தழுவிய ரீதியில் அமுலிருந்து பயணத்தடை நேற்று அதிகாலை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
