இலங்கை முழுவதும் பயண கட்டுப்பாடு ஜுன் மாதம் 7ம் திகதிவரை நீடிப்பு
நாடு முழுவதும் அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜுன் மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதிக்குள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நாட்டின் கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த 2 வாரங்கள் முழுமையாக நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏற்கனவே அமுலிலுள்ள பயண கட்டுப்பாடு எதிர்வரும் ஜுன் மாதம் 7ம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இராணுவ தளபதி சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri