மீண்டுமொரு முடக்கத்துக்கு தயாராகிறதா இலங்கை? தீர்மானம் குறித்து இராணுவ தளபதி கூறியுள்ள விடயம்
நாட்டில் கோவிட் - 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று இருக்கின்ற போதிலும் நாட்டினை முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை பிறப்பிக்கவோ இப்போது எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கோவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஆனால் நாட்டின் அடுத்த கட்ட நிலைமைகளுக்கு அமைய தீர்மானங்கள் எப்போதும் மாறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் - 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலை தொடர்ந்தும் காணப்படுவதாகவும், மீண்டுமொரு முடக்கத்துக்கு தயாராக வேண்டும் எனவும் சுகாதார தரப்பு எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
