இலங்கையில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்படுமாக இருந்தால் கடுமையாக பயணக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசெல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக மக்கள் சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்பட்டமையை அவதானிக்க முடிந்த நிலையில் தொடர்ந்தும் அவ்வாறு அவர்கள் நடந்து கொண்டால் தொற்று நிலைமை அதிகரிக்கலாம்.
இதன்போது பயணக்கட்டுப்பாட்டை கடுமையாக நடைமுறைப்படுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
