இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணங்கள் மேற்கொள்ள தடை
இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீண்ட கால வீசா அனுமதியுடையவர்கள் மற்றும் குறுகிய கால அனுமதியுடையவர்கள் உள்ளிட்ட இலங்கை, பங்களாதேஷ், நேபால் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் லோரன்ஸ் வொங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை இரவு 11.59 முதல் இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து ட்ரான்ஸிஸ்ட் அடிப்படையிலும் சிங்கப்பூரிற்குள் பிரவேசிப்பதற்கு; இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அதனை அண்டிய நாடுகளில் கோவிட் நிலைமை மிக மோசமாக காணப்படுகின்றது எனவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam