ரணிலின் முன்னாள் செயலாளருக்கு பயணத்தடை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடைசெய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று(23) நடைபெற்ற சிறப்பு பொலிஸ் ஊடக சந்திப்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சட்ட) கலிங்க ஜெயசிங்க இதனைத் அறிவித்துள்ளார்.
வாக்குமூலம்..
கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று முன்தினம்(22) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் ஏக்கநாயக்க வெளிநாடு செல்வதைத் தடை செய்ய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதியின் செயலாளராகப் பதவி வகித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஏக்கநாயக்கவும் அழைக்கப்பட்டிருந்தார்.
மேலும் அரச நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan