கோட்டாபயவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! குற்றஞ்சாட்டும் சரத் வீரசேகர

Gotabaya Rajapaksa Sarath Weerasekara Easter Attack Sri Lanka Sri Lanka Podujana Peramuna Suresh Salley
By Rakesh Jun 04, 2026 03:19 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, தற்போதைய அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் கோர விபத்து.! பெற்றோர் கண்முன்னே பறிபோன 2 வயது சிறுமியின் உயிர்

கண்டியில் கோர விபத்து.! பெற்றோர் கண்முன்னே பறிபோன 2 வயது சிறுமியின் உயிர்

கோட்டாவுக்குப் பயணத்தடை

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "தற்போதைய அரசு ட்ரில்லியன் கணக்கில் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்ற போதிலும், நாட்டில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை.

அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்வு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக ஒட்டுமொத்த மக்களும் கடுமையான பொருளாதாரச் சுமையை எதிர்கொண்டுள்ளனர்.

கோட்டாபயவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! குற்றஞ்சாட்டும் சரத் வீரசேகர | Travel Ban To Gottabaya Rajapaksha Warns Sarath

அரசின் மீதான இந்த மக்கள் அதிருப்தியை மறைக்கவும், தங்களின் நிர்வாகத் தோல்விகளைத் திசைதிருப்பவுமே கோட்டாபய ராஜபக்சவை இலக்கு வைத்து அரசு இவ்வாறான கீழ்த்தரமான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல விசாரணை ஆணைக்குழுக்கள் மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

அத்துடன் அமெரிக்காவின் எப்.பி.ஐ., இன்டர்போல், அவுஸ்திரேலிய மற்றும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் என பல சர்வதேச புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்த எந்தவொரு விசாரணையிலும் கோட்டாபய ராஜபக்ச அல்லது சுரேஷ் சலே ஆகியோரின் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

சுரேஷ் சலே 

இந்தத் தாக்குதலானது நியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் மசூதி தாக்குதலுக்குப் பழிவாங்கும் வகையில், சஹ்ரான் தலைமையிலான ஐ.எஸ்.ஐ.எஸ். கொள்கையுடைய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்பது சர்வதேச ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எப்.பி.ஐ. விசாரணைப் பிரிவின் பிரதானி ராஜ் படேலும் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கோட்டாபயவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! குற்றஞ்சாட்டும் சரத் வீரசேகர | Travel Ban To Gottabaya Rajapaksha Warns Sarath

இவ்வாறிருக்கையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சு, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்காமல் தனிநபர்களை வேட்டையாடுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

சுரேஷ் சலே போன்ற ஒரு உயர் அதிகாரியை 180 நாள்கள் தடுத்து வைத்து சித்திரவதை செய்வது அநீதியானது. அதேபோல், அசாத் மௌலானா என்பவர் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக 'சனல் 4' ஊடகத்துக்கு வழங்கிய ஆதாரமற்ற பொய்களை அடிப்படையாகக் கொண்டு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப் பீரிஸ் செயற்படுவது முழு திணைக்களத்துக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆபத்தான வாக்கெடுப்பு..! தமிழர்களுக்கு சாதகமா - பாதகமா..

சுவிட்சர்லாந்தில் ஆபத்தான வாக்கெடுப்பு..! தமிழர்களுக்கு சாதகமா - பாதகமா..

 அரசியல் சதி முயற்சிகள்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்தத் தேர்தலின் ஊடாக வடக்கு மாகாணத்துக்குக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முற்பட்டால் அதுவே நாட்டின் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும்.

அவ்வாறு செய்வது, பல தசாப்தங்களாக நாம் பாதுகாத்து வந்த நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை இல்லாது செய்து, நாட்டை ஒரு கூட்டாட்சி நாடாக மாற்றிவிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது.

கோட்டாபயவுக்குப் பயணத்தடை விதித்தமை அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! குற்றஞ்சாட்டும் சரத் வீரசேகர | Travel Ban To Gottabaya Rajapaksha Warns Sarath

கடந்த கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், கொவிட் - 19 பெருந்தொற்றுப் பேரழிவுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி உறுதிப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போதைய அரசு தேசிய பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இத்தகைய அரசியல் சதி முயற்சிகள் நிறுத்தப்படும் வரை, நாட்டுப்பற்றுள்ள மக்களுடன் இணைந்து நாம் இதனை உன்னிப்பாகக் கண்காணிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US