சாமர சம்பத்திற்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்தத் தடையை நீக்கியுள்ளது. சாமர சம்பத் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக சமார சம்பத் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்கவிற்கு ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.