கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸின் பிடியிலிருந்து தப்பிச் சென்றவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
அண்மையில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் தேடப்படும் குற்றவாளிக்குழு உறுப்பினர் ரவிந்து சங்க என்றழைக்கப்படும் 'போரு மூனா'வின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அவிசாவளை மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேல் மாகாண தெற்கு பொலிஸ் பிரிவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு இந்த பயணத்தடை நேற்றைய தினம் (15.03.2023) விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி ஹன்வெல்லவில் உணவக உரிமையாளரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 'போரு மூனா', பெப்ரவரி 24ஆம் திகதி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்கு விமானத்தில் ஏற முற்பட்டுள்ளார்.
பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்
இதன்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், அவர் இரண்டு பௌத்த பிக்குகளின் உதவியுடன் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் ஹன்வெல்ல உணவக உரிமையாளரின் கொலைக்கு பின், பண்டாரகம, மில்லனிய, மல்வத்த வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தஞ்சமடைந்ததாக, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போது, போரு மூனா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனை அடிப்படையாக கொண்டு, அவருக்கு உதவியமைக்காக இலங்கை கடற்படை உறுப்பினர்
ஒருவரும், அவரது மனைவியும் ஏனைய நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri
