உதயங்க வீரதுங்கவிற்கு எதிரான பயணத்தடை நீக்கம்
உதயங்க வீரதுங்கவிற்கு எதிரான பயணத்தடை நீக்கம் ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிரான பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பெருந்தொகை பணம் மோசடி
தற்காலிக அடிப்படையில் உதயங்கவிற்கான பயணத் தடையை நீக்குமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமக்கு எதிரான பயணத் தடையை நீக்குமாறு உதயங்க சட்டத்தரணி ஊடாக கோரியிருந்தார்.
ரஸ்ய சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதில் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் வழக்குத் தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.
பெருந்தொகை பணம் மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.