இரத்தினகல் சுரங்கத்திற்குள் சிக்கி இருவர் பரிதாபமாக பலி
அவிசாவளை, வெரலபிட்டிய பிரதேசத்தில் இரத்தினகல் சுரங்கத்திற்குள் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு 7 மணியளவில் பெய்த மழையை தொடர்ந்து மின்சார தடை ஏற்பட்டது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு சுரங்கத்திற்குள் சென்ற இருவர் அதற்குள் சிக்கியுள்ளனர்.
உயிரிழந்த இரண்டு நபர்களின் சடலங்களும் அவசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினகல் மற்றும் தங்க நகை அதிகார சபையின் அனுமதியுடன் இந்த சுரங்கம் அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெஹிஓவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 41 மற்றும் 45 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவருக்கும் இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam