இன்று முதல் மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவை!
மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது. வரையறுக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் ரயில்கள் இந்த நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்படும்.
அந்த வகையில், மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத பொது போக்குவரத்து சேவை சுமார் இரண்டு மாத காலத்திற்கு பிறகு இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றன.
இதன்படி, 7 புகையிரதங்கள் காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கண்டி- கொழும்பு கோட்டைக்கு 2 அலுவலக புகையிரத பயணமும், ரம்புக்கனை - கொழும்பு கோட்டைக்கு ஒரு புகையிரத பயணமும், சிலாபம்- கொழும்பு கோட்டைக்கு ஒரு புகையிரத பயணமும், பெலியத்தை - கொழும்பு கோட்டை ஒரு புகையிரத பயணமும், காலி - கொழும்பு கோட்டை ஒரு புகையிரத பயணமும், மஹவ- கொழும்பு கோட்டைக்கு ஒரு புகையிரத பயணமும் காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவை அடிப்படையில் ஈடுபடும்.
புகையிரத போக்குவரத்து சேவையினை பயன்படுத்தும் பயணிகள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையான முறையில் பின்பற்ற வேணடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
