சுற்றுலாத்துறையை மையப்படுத்தி போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் : பி.எஸ்.எம். சார்ள்ஸ்

Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Kajinthan Jun 07, 2024 06:10 PM GMT
Report

போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதனூடாக பொருளாதார அபிவிருத்திகளை அடைய முடியும் எனவும், சுற்றுலாத்துறைசார் விடயங்களை மையப்படுத்தி போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்(P.S.M.Charles) தெரிவித்துள்ளார்.

கடல்வழி போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர்  தலைமையில் இன்று (07/06/2024) ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் கொடூரமாக கொலை - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

திட்ட முன்மொழிவுகள்

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள், புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் , எதிர்கால திட்ட முன்மொழிவுகள், தொடருந்து போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்துச் செயற்பாடுகள், வடக்கு மாகாண போக்குவரத்துத் துறையில் காணப்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

தீவுகளுக்கான பயணிகள் போக்குவரத்திற்குரிய படகுச் சேவை விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும், இறங்குத் துறைகள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் இதன்போது கூறினார்.

சுற்றுலாத்துறையை மையப்படுத்தி போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் : பி.எஸ்.எம். சார்ள்ஸ் | Transport Sector Should Be Improved Psm Charles

பேருந்து பயணிகள் நாளாந்தம் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது ஆளுநர் எடுத்துரைத்தார். ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் அரச மற்றும் தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆளுநர் கூறியதற்கு அமைய அதற்கான உரிய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அமைச்சின் துறைசார் அதிகாரியால், மாகாண அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

விஎப்எஸ் குளோபல் விசா பிரச்சினை புதிய திருப்பம்

விஎப்எஸ் குளோபல் விசா பிரச்சினை புதிய திருப்பம்

நேரடி தொடருந்து சேவை

பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளுக்கான சமிஞ்சைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், யாழ் மற்றும் காங்கேசன்துறை தொடருந்து நிலையங்களுக்கு அருகில் போக்குவரத்து முனையங்களை நிறுவுதல் போன்ற விடயங்கள் குறித்தும் ஆளுநர் தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.

சுற்றுலாத்துறையை மையப்படுத்தி போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் : பி.எஸ்.எம். சார்ள்ஸ் | Transport Sector Should Be Improved Psm Charles

வடக்கு மாகாணத்திலுள்ள தொடருந்து நிலையங்களுக்கு அருகில் காணப்படும் பொருள் களஞ்சியசாலைகளை உரியவாறு பயன்படுத்த வேண்டும் எனவும், பயன்பாடு குறைந்து காணப்படும் களஞ்சியசாலைகளை தனியாரிடம் வழங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் போக்குவரத்துத் துறையை விஸ்தரிப்பது தொடர்பில் கேட்டறிந்துக்கொண்ட மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், கடழ்வழி போக்குவரத்தின் அவசியம் மற்றும் தேவை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

சுற்றுலாத்துறையை மையப்படுத்தி போக்குவரத்து சேவையை மேம்படுத்த வேண்டும் : பி.எஸ்.எம். சார்ள்ஸ் | Transport Sector Should Be Improved Psm Charles

அத்துடன் எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்குள் தண்டவாள புனரமைப்பு நிறைவு செய்யப்பட்டு, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான நேரடி தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்படும் எனவும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், வட மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கிய பெண்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரிடம் சிக்கிய பெண்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US