நாடாளுமன்ற வீதியை முடக்கியுள்ள போக்குவரத்துச் சபை பேருந்துகளின் வரிசை
பத்தரமுல்லையில் அமைந்துள்ள நாடாளுமன்ற வீதி இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்துகளின் வரிசை காரணமாக முடங்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற வீதியில் இன்று (09.01.2024) காலை முதல் நீண்டவரிசையில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் தரித்து நிற்கத் தொடங்கியுள்ளன.
பழுதுபார்க்கப்பட்ட பேருந்துகள்
இந்நிலையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், பதுளை, ஏறூர், அம்பாறை போன்ற தொலைதூர பிரதேசங்களில் இருந்தும் கொழும்புக்கு அருகிலுள்ள பேருந்து டிப்போக்களிலிருந்தும் குறித்த பேருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த டிப்போக்களில் இருந்து பழுதுபார்க்கப்பட்ட பேருந்துகளே போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிடுவதற்காக இவ்வாறு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
