பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்கு வெளியான தகவல்
தனியார் பேருந்துகளில் செல்லுபடியான பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளிடம் அபராதம் அறவிட வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டம் (1991 இன் இல. 37) பேருந்து உரிமையாளர்கள் உரிம நிபந்தனைகளை மீறினால் மட்டுமே அபராதம் விதிக்க அந்த அதிகார சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது.
எனினும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் பயணிகளிடம் 100 ரூபா அபராதம் மற்றும் பயணக் கட்டணத்தின் இரு மடங்கை அறவிடும் முறையை நடைமுறைப்படுத்தியது.
அபராதம்
இது சட்டப்பூர்வமற்றதா எனக் கேட்டபோது, மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க, 1992ஆம் ஆண்டு மாகாண பிரகடனத்தின் அதிகாரங்களின் கீழ் அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறினார்.
எவ்வாறாயினும், ஒன்பது மாகாணங்களிலும் தனித்தனி போக்குவரத்து பிரகடனங்கள் இருப்பதால், அவற்றை விரைவில் கண்காணித்து திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரீன் அத்துக்கோரள குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




