கதிர்காமத்தில் உள்ள மர்ம மாளிகை! உரிமையாளர் தொடர்பில் தீவிர விசாரணை
கதிர்காமம் மாணிக்க கங்கை அருகே அமைந்துள்ள மர்ம மாளிகையின் உரிமையாளர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த மாளிகை கடந்த 2007ஆம் ஆண்டு தொடக்கம் நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான மின் இணைப்பு ஜீ.ராஜபக்ச எனும் பெயரில் பெறப்பட்டிருந்தது.
உரிமையாளரைத் தேடிக் கண்டறியும் வரை
ஜீ.ராஜபக்ச என்பது கோட்டாபய ராஜபக்ச என்பதன் சுருக்கப்பெயர் என்று கருதப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் குறித்த மாளிகைக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் குறித்த மர்ம மாளிகை தற்போதைக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த மர்ம மாளிகையின் உண்மையான உரிமையாளரைத் தேடிக் கண்டறியும் வரை விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri