ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை
ஊழல் தலைவர்களை இனியும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற தெளிவான செய்தியை இலங்கையர்கள் வழங்கியுள்ளனதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
இதன்படி, அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும், பகிரங்கமாக தங்கள் சொத்துக்களை அறிவித்து வெளிப்படைத் தன்மைக்கான தனிப்பட்ட அர்ப்பணிப்பை வழங்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.
சொத்துக்களின் பொது அறிவிப்பு
இலங்கையில் நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் வேட்பாளர்கள், மக்கள் தங்கள் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்த புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மக்கள் தங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்க சொத்துக்களின் பொது அறிவிப்பு ஒரு முக்கியமான படியாக இருக்கும்.
மேலும், தூய்மையான அரசியலுக்கான குடிமக்களின் அழைப்புக்கு செவிசாய்க்க வேண்டும்
என்றும், நாட்டுக்கு தேவையான மாற்றமாக இருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு
வலியுறுத்தியுள்ளது.