மலையகத்தமிழர் 200 மாநாட்டிற்கு தமிழக பொலிஸார் தடை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் சென்னையில் நடைபெற இருந்த இலங்கை மலையகத்தமிழர் 200 ஆண்டு நிகழ்விற்கு தமிழக பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மலைகத்தமிழர் 200 ஆண்டு அவலவாழ்வு எனும் தொனிப்பொருளின் கீழ் நாளை(15.10.2023) நடைபெறவிருந்த குறித்த நிகழ்வுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு, சென்னை - மாம்பலத்தில் இலங்கை மலையகத் தமிழர் 200 ஆண்டு அவல வாழவும், அதற்கான தீர்வுகளும் பற்றிய ஆய்வு மாநாடு தமிழக முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தலைமையில் பல அறிஞ்ஞர்கள் பங்குபற்றயிருந்துள்ளனர்.
தமிழக பொலிஸாரால் தடை
இந்நிலையில் குறித்த மாநாட்டிற்கு தமிழக பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்ந தடையுயை நீக்கி மாநாட்டை மீண்டும் நடத்த ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை நாடிஉள்ளனர் என கூறப்படுகிறது.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan