சர்வதேசத்தில் உருவாகியுள்ள ஈழ அரசாங்கம்! நாடு பாரிய ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை
பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பதென்பது உண்மையில் நீதி மற்றும் சமாதானத்திற்கான அதிகாரத்தை கொடுப்பதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேர்காணலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இலங்கையில் பொலிஸ் அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால் மத்திய அரசாங்கத்திற்கான பொலிஸ் மற்றும் மாகாணங்களுக்கான பொலிஸ் என இரு பிரிவு உருவாகும்.
மத்திய அரசாங்க பொலிஸாரின் நிலை
அப்படியாகிவிட்டால் மத்திய அரசாங்கத்திற்கான பொலிஸாரால் ஒரு சில குற்றச்செயல்கள் தொடர்பில் மாத்திரமே தேடிப் பார்க்க முடியும். பணம் சம்பந்தமான மற்றும் வெளிநாடுகள் தொடர்பான குற்றங்களையே தேடிப்பார்க்க முடியும்.
அப்பொழுது மாகாணசபை தான் பொலிஸ் அதிகாரத்தை கையிலெடுக்கும். பொலிஸ் அதிகாரத்தை கொடுப்பதென்பது உண்மையில் நீதி மற்றும் சமாதானத்திற்கான அதிகாரத்தை கொடுப்பதாகும்.
அப்படியிருக்கும் போது எண்ணிப்பாருங்கள் வடக்கி மீண்டும் தீவிரவாதம் தோற்றம் பெற்றால் என்ன செய்வதென்று. ஏனெனில் மறக்க வேண்டாம் இந்த நாட்டில் பிரிவினை வாதம் என்பது நிறுத்தப்படவில்லை.
சர்வதேசத்தில் ஈழ அரசாங்கம்
இதனை தான் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொண்டிருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ய நினைத்ததையே இவர்களும் அடைய எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவர்களின் கையில் ஆயுதம் இல்லை. அது மாத்திரமே வித்தியாசம்.
புலம்பெயர் விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தில் ஈழ அரசாங்கத்தை உருவாக்கி அதன் பிரதமராக ‘ருத்ரகுமாரன்’ என்ற சட்டத்தரணியை நியமித்துள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது நாடு பாரிய ஆபத்தில் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
