வனவிலங்கு அதிகாரிக்கு இடமாற்றம்! சஜித் வெளியிட்டுள்ள தகவல்
யால தேசிய பூங்காவில் 12000 ஏக்கர் நிலத்துக்கு வேறு நோக்கம் ஒன்றுக்காக பயன்படுத்தப்படவிருத்தமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தகவல் தெரிவித்த வனவிலங்கு அதிகாரிகளுக்கு உடனடியாக இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இதனை கூறியுள்ளது.
இந்த அதிகாரிகள் குறித்த காணி குறித்து, சஜித் பிரேமதாசாவுக்கு தகவல் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர்களில் சிலருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன என்றும் சஜித் பிரேமதாசவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தெரியாத நோக்கங்களுக்காக யால தேசிய பூங்காவிலிருந்து 12,000 ஏக்கரை சுவீகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சஜித் பிரேமதாச நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும் இதனை வனவிலங்குதுறை அமைச்சர் சி.பி. ரத்னாயக்க மறுத்திருந்தார்.