தேர்தல் ஆணைக்குழுவில் அனுபவமுள்ள பல அதிகாரிகளுக்கு இடமாற்றம்! சஜித் தரப்பு குற்றச்சாட்டு
கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணைக்குழுவில் பணிபுரியும் அனுபவமுள்ள பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மதுமபண்டார ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் குழுவை தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து இவ்வளவு குறுகிய காலத்தில் நீக்குவது கடுமையான சந்தேகத்திற்குரிய விடயமாகும் என்று அவர் கூறியுள்ளார்.
இது தேர்தல் ஆணைக்குழுவின் சுதந்திரத்திற்கு ஏற்ப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும். அரசியல் அதிகாரத்தின் செல்வாக்கால் புதிய அதிகாரிகளை நியமிப்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த வழிவகுக்காது என்ற அபாயமும் உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இது குறித்து மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அத்துடன் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறும் செயல்முறைக்கு எதிராக அனைத்து ஜனநாயகக் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தாம் வலியுறுத்துவதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான முக்கிய வழி வாக்களிப்பாகும். ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் ஜனநாயக மயமாக்கலைப் பாதுகாப்பதில் வாக்களிப்பு மிக முக்கியமான காரணியாகும்.
எனவே, ஜனநாயக நாடுகளில், தேர்தல்களை நடத்துவதற்கு பொறுப்பான நிறுவனம் ஒரு சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற அமைப்பாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
எனவே, நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்றம் சாதாரண அரசாங்க விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்று ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
