வடக்கு - கிழக்கில் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்
வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்தியர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமனங்கள்
அத்தோடு, பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், என்.சீ.டி.ஆரியரட்ண வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.ஏ.நி. நிச்சங்க அம்பாறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.எச்.எம்.அசாத் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டபிள்யூ.கே.சீ.பீ.வீரவத்த கிளிநொச்சி பொது வைத்தியசாலை பணிப்பாளராகவும், டி.எம.ஏ.கே.திசாநாயக்க கிளிநொச்சி மாவட்ட பிரந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், எஸ்.என்.வீ.பிரேமதாச முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளராகுவம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எதிர்வரும் 02 ஆம் திகதிக்கு பின் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 23 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
