முல்லைத்தீவில் கடமையாற்றிய 150 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகக் கடமையில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 150 பேர் வரையில் இடமாற்றம் பெற்று அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், மற்றும் பிரதேச செயலகங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர்களே இவ்வாறு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, போன்ற மாவட்டங்களிலிருந்து போக்குவரத்து சிரமங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியாற்றி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பல்வேறு வகையில் பாடுபட்டுள்ள இவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று (23) வரையில் 150 இற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் வெற்றிடத்திற்கு புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
