வெளிநாடொன்றில் திருநங்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு
அமெரிக்க மாகாணமான தெற்கு டகோட்டாவில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மாகாண ஆளுநர் லாரி ரோடன் (Larry Rhoden) தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் பாடசாலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களில் திருநங்கைகள் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
தடை உத்தரவு
அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றால், பாடசாலை அல்லது மாநிலத்திற்கு எதிராக அறிவிப்பு மற்றும் தடையுத்தரவு விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த தடையைப் பிறப்பிக்கும் 13ஆவது மாகாணம் இதுவாகும் என்பதோடு டென்னசி, மொன்டானா மாகாணத்திலும் குறித்த சட்டத்திற்கான பிரேரணை ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு News Lankasri
